மோகன்லாலை முதலில் பிடிக்கவில்லை’’ மனைவி சுசித்ரா மனம் திறக்கிறார்..

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்,’பாரோஸ்’’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இதன் தொடக்க விழாவில் மோகன்லால் மனைவி சுசித்ரா பங்கேற்றுப் பேசியது நிகழ்ச்சியின் ‘’ஹைலைட்’’.
‘’ நான் பொதுவாக சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. எனது கணவர் மோகன்லால் முதன் முறையாக டைரக்டு செய்கிறார் என்பதால் இங்கு வந்துள்ளேன்.
‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள் ‘ படத்தில் தான் அவரை முதன் முறையாகப் பார்த்தேன்.எனக்கு அவரை சுத்தமாகப் பிடிக்கவில்லை.
பிறகு வில்லன் வேடங்களில் நடித்த அவரது படங்களைப் பார்க்கும் போது வெறுப்பு அதிகமானது.
‘எண்ட பொம்மு குட்டி அம்முவுக்கு’’ படத்தைப் பார்த்த போது தான் மோகன்லால் மீது காதல் ஏற்பட்டது. பழகினோம். திருமணம் செய்து கொண்டோம். அவர் எனக்குப் பிடித்த நடிகர். பாரோஸ் வெற்றி பெறும். அதன் பின்னர் எனக்கு பிடித்த டைரக்டராகவும் இருப்பார்’’ எனக் கூறி, கை தட்டல்களை அள்ளிக்கொண்டார், சுசித்ரா மோகன்லால்.
-பா.பாரதி.
[youtube-feed feed=1]