புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பு மருந்தான Pfizer, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்களுக்கு, முதல் டோஸ் மட்டுமே போதுமானது என்று புதிய ஆராய்ச்சியின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Pfizer-BioNTech தடுப்பு மருந்தான இது, 21 நாட்கள் இடைவெளியில், 2 டோஸ்களாக போடப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், இந்த தடுப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள ஒரு மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், இந்த புதிய விஷயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வில், மொத்தம் 1090 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் Pfizer தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள். அவர்களிடம், முந்தைய கொரோனா தொற்று குறித்தும், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகு, ஏதேனும் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதா? என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

முடிவில், இந்த ஆய்வின்மூலம், ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, Pfizer தடுப்பு மருந்தின் முதற்கட்ட டோஸ் மட்டுமே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.