திருவனந்தபுரம்;

உயிரைப் பறிக்கும் நீல திமிங்கலம் எனும் ஆன்லைன் விளையாட்டிற்கு கேரளாவில் முதல் சிறுவன் பலியாகியுள்ளான்

ரஷியாவில் உருவான ஒரு உயிரைப்பறிக்கும் ஆன்லைன் கேம் ‘நீல திமிங்கலம் தற்கொலை’ என்ற தற்கொலை விளையாட்டு.

‘நீல திமிங்கலம்’ என்ற இணையதள விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ ஒருவர் கொடுக்கும் கட்டளை அடிப்படையில் நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக் கொள்வது, மொட்டைமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என்பன போன்ற வேலைகளை போட்டிகளில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டும்.

போட்டியாளர்கள் நாள்தோறும் தங்கள் விபரீத விளையாட்டை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது இந்த விளையாட்டு விதியாகும்.

50 நாட்களுக்கு வெவ்வேறு விபரீத விளையாட்டுகள் இந்த நீல திமிங்கலத்தில் இருக்கும். கடைசி கட்டமாக ஐம்பதாவது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் பணி வழங்கப்படும். இந்த விளையாட்டிற்கு ரஷியாவில் கடந்த 2015-ல் இருந்து 2016 வரை சுமார் 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விளையாட்டு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 29-ந்தேதி மும்பையில் 9-ம் வகுப்பு படி க்கும் 14 வயது மாணவன் ஒருவன் இந்த விளையாட்டின் காரணமாக 5 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.

மேலும் இந்தூர் மற்றும் மகராஷ்டிராவை சேர்ந்த 2 பேர் தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டனர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் மித்னாபூரில் 10ம் வகுப்பு மாணவன் அங்கன் குளியறையில் பாலிதீன் தாள்களை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கோலை செய்து கொண்டான்.

இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பெரும்குளம் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது 16) என்ற 11ம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் 26ம் தேதி படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகெ £ண்டான். இது தொடர்பாக விலிபில்ஷாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மனோஜின் தாய் அனுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தனது மகனின் மரணத்திற்கு நீல திமிங்கில ஆன்லைன் விளையாட்டுக்கு தொடர்பு இருப்பதை தெரிவித்தார்.

தனது மகன் கூறியதாக அனு கூறுகையில், ‘‘ புதிதாக நீல திமிங்கில விளையாட்டை கண்டுபிடித்துள்ளேன். அதன் முடிவு 3 விதங்களில் இருக்கும். ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அல்லது வேறு நபரை கொல்ல வேண்டும். அல்லது மனதை இழக்க நேரிடும் என்று தெரிவித்தான். அந்த விளையாட்டை விளையாட மாட்டேன் என்று மனோஜ் சத்தியம் செய்திருந்தான். எனினும் எனக்கு தெரியாமல் விளையாடி வந்துள்ளான்.

கடந்த 9 மாதங்களாக அவனது நடவடிக்கைகள் மாறியிருந்தது. அதற்கு முன்பு அவன் கடற்கரைக்கு செல்லமாட்டான். ஆனால் தற்போது அங்கு தனியாக சென்று வந்தான். கல்லறைக்கும் இரவு நேரத்தில் சென்று வந்தான்.

கடந்த ஜனவரி மாதம் தனது கையில் 3 எழுத்துக்களை பிளேடால் எழுதியிருந்தான். அப்போது அவனது கை முழுவதும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவனது நண்பன் தான் அதை எழுதியுள்ளான். நண்பன் மறுத்தபோதும், மனோஜ் வலுக்கட்டாயமாக எழுத சொல்லியுள்ளான்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ நான் தற்கொலை செய்துகொண்டால் நீ கவலை படுவாயா?. நான் இறந்த பிறகு உனது முழு அன்பையும் சகோதரிக்கு செலுத்த வேண்டும் என்றான். இதனால் நான் அழுதேன். அப்போது நான் விளையாட்டுக்காக சொன்னேன் என்று கூறி என்னை தேற்றினான். உனது சாவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவனிடம் கூறினேன்’’ என்றார்.

சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறுகையில்,‘‘ மனோஜ் தன்னம்பிக்கை அற்றவராக இருந்துள்ளான். கடந்த சில மாதங்களாக குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனிமையில் இருந்துள்ளான். மொபைல் விளையாட் டுகளுக்கு அடிமையாக இருந்துள்ளான்’’ என்றார்.

திருவனந்தபுரம் எஸ்பி அசோக்குமார் கூறுகையில்,‘‘ இது விர நீல திமிங்கிலம் விளையாட்டு குறித்து எங்களது கவனத்திற்கு வரவில்லை. இது தான் முதல்முறை. மனோஜ் மரணத்திற்கு எவ்வித துப்பும் கிடை க்கவில்லை. அவரது தாய் தான் இந்த விளையாட்டு குறித்து தெரிவித்துள்ளார். இந்த கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

இதை தொடர்ந்து மனோஜின் கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உலக முழுவதும் ‘நீல திமிங்கலம்’ என்ற இந்த ஆன்லைன் விளையாட்டின் தாக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இ ந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.