மணிப்பூரில் பயங்கர கலவரம்: முதல்வரை சுட்டு கொல்ல முயற்சி

Must read

மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் ஐபோபி சிங் இன்று இம்பால் செல்வதற்காக தனது ஹெலிகப்டரில் ஏறும்போது திடீரென்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பினார்.
ibibi
முதல்வர் இன்று உக்ருல் என்ற இடத்தில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிளம்பும்போது அப்பகுதியில் முதல்வருக்கு எதிராக கலவரம் வெடித்தது. ஒரு மணி நேரம் கழித்து அவர் மாநில தலைநகருக்கு திரும்ப முடிவெடுத்து தனது ஹெலிகாப்டரில் ஏறும்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக குண்டு எதுவும் முதல்வர் மீது படவில்லை, ஆனால் கலவரக்காரர்கள் இரண்டு அல்லது மூன்று வாகனங்களுக்கு தீ வைத்ததாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
முதல்வருக்கு எதிரான கலவரத்துக்கு காரணம் டி.என்.எல் என்ற அமைப்பு என்பது தெரியவந்துள்ளது. அந்த இயக்கம் முதல்வர் உக்ருல் நகருக்கு வருவதை விரும்பவில்லை, எனவே அந்த இயக்கம் இன்று உக்ருல் நகரில் பந்த் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஓக்ரம் ஐபோபி சிங் பத்திரமாக இம்பால் திரும்பியிருக்கிறார். இப்போதைய நிலை குறித்து ஆராய முதல்வர் தலைமையில் அவசர கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

More articles

Latest article