ரிக் இயந்திரத்தால் துளையிடப்பட்டுள்ள பள்ளத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ள நிலையில், பள்ளத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் சிக்கியுள்ளான். அவனை மீட்பதற்கான பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக வெளிநாட்டு ரிக் இயந்திரங்களை வைத்து மீட்பு பணிக்காக துளையிடும் பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது, போர்வெல் இயந்திரம் மூலம் அப்பணியை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏணி வழியாக தீயணைப்பு படை வீரர் ஒருவர் தோண்டப்பட்டுள்ள 45 அடி ஆழம் கொண்ட குழிக்குள் இறக்கிவிடப்பட்டுள்ளார். இப்பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளத்தின் அருகிலேயே நின்றுக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். குழிக்குள் இறங்கியுள்ள தீயணைப்பு படை வீரர், குழியின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், பாறையின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும், பாறை எந்த அளவுக்கு கடினமானதாக இருக்கிறது என்பது குறித்தும் அந்த வீரர் பார்வையிடுவார் என்றும், பாறையின் அளவு எவ்வளவு இருக்கும் என்றும் அவர் கணக்கிட்டு அதிகாரிகளிடம் தெரிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படை வீரரின் தகவலை பெற்று, பின்னர் போர்வெல் இயந்திரம் மூலம் மூன்று துளைகளை போடப்பட்டு, பின்னர் ரிக் இயந்திரம் மூலம் மீண்டும் துளையிடும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]