விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் மாதம் விபத்து ஏற்பட்டது. இதில் 14 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர்.
அவர்கள் குடும்பத்துக்கு ஆலை உரிமையாளர் நிவாரண உதவி தருவதாக உறுதி அளித்தார்.

அவர்கள் கொடுத்த காசோலையை, வருவாய் அதிகாரிகள், உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு வழங்கினர். வங்கியில் செலுத்தப்பட்ட அந்த காசோலைகள் பணம் இல்லை, என திரும்பி வந்து விட்டது.
ஆலை முதலாளியிடம் முறையிட்டால் “கொரோனா காலம் என்பதால் பணம் போட முடியவில்லை” என பதில் சொல்லி சமாளித்துள்ளார்.
ஆனால் மீண்டும் காசோலைகளை வங்கியில் செலுத்திய போதும் பணம் இல்லை என்றே திரும்பி வந்து விட்டது. பாதிக்கப்பட்டோர், என்ன செய்வது என தெரியாமல் புலம்புகிறார்கள்.
– பா. பாரதி
Patrikai.com official YouTube Channel