சென்னை:
சென்னை வானகரத்தில் தனியார் எண்ணெய் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் கிடங்கு அருகிலேயே பிளைவுட், டைல்ஸ் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகள் உள்ளன.
எண்ணெய் கிடங்கில் திடீரென பற்றிய தீ, அருகில் இருந்த 2 பிளைவுட் பர்னிச்சர் கிடங்கு மற்றும் 6 டைல்ஸ் கிடங்கு ஆகியவற்றிற்கும் பரவியது. அங்கிருந்த 3 எண்ணெய் டேங்கர் லாரிகளிலும் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மதுரவாயல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel