ஐதராபாத்:

தெலுங்கானா முதல்வர் பயணம் செய்ய தயாராக இருந்த ஹெலிகாப்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

தெலுங்கான மாநில முதல்வராக இருப்பவர் சந்திரசேகர ராவ். இவர் இன்று காலை  கரிம்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிவிட்டு அடுத்த கூட்டத்தில் பங்கேற்க புறப்பட தயாரானார்.

அப்போது அந்த ஹெலிகாப்டரின் பின்பகுதியில் சரக்கு வைக்கும் இடத்தில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திரசேகராவ் உடடினயாக ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட பிறகு தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், தீ பிடித்த பெட்டியை ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி வீசியதால், ஹெலிகாப்டரும் விபத்தில் இருந்து தப்பியது என்றும் கூறப்படுகிறது.

விசாரணையின்போது, ஹெலிகாப்டரில் உபயோகப்படுத்தி வந்த வயர்லஸ் சாதனத்தில் தீ பிடித்ததாக தெரிய வந்துள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.