சென்னை பாரிமுனை எல்ஐசி அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து…

Must read

சென்னை:

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

சென்னையின் பாரிஸ் கார்னரில் ஆயுள் காப்பீடு நிறுவனமான  எல்.ஐ.சி அலுவலகம் செய்லபட்ட வருகிறது. அங்குள்ள 5வது மாடியில்  இன்று அதிகாலை  3 மணி அளவில்  தீ விபத்து ஏற்பட்டது. சுமார் மூன்றரை மணி நேரம் தீ எரிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து,  சுற்றுவட்டாரப்பகதிகளான எஸ்ப்ளேனேட், வாண்ணாரப்பேட்டை, ராயபுரம், எக்மோர், தண்டையார்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி உள்பட 7  இடங்களிலிருந்து தீ அணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

காலை 7 மணி அளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.  விபத்து நடந்த நேரத்தில் அலுவலகத்தில் யாரும் இல்லாததால் உயிர் பலி தடுக்கப்பட்டது.  இந்த திடீர் தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. சேதம் மதிப்பு ரூ.48ஆயிரம் என மதிப்பிடப்பட்டள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள தீயணைப்புதுறை அதிகாரி,  சுமார் 4500 அடி பரப்பளவுள்ள அந்த தளத்தில் சுமார் 500 அடிக்குள் மட்டுமே தீ பற்றி எரிந்தது. அது மேலும் பரவாதவாறு கட்டுப்படித்து விட்டதாகவும், ரூ .9 லட்சம் மதிப்புள்ள கோப்புகள், கணினிகள் மற்றும் பிற தயாரிப்புகளை  பாதுகாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து  எல்.ஐ.சி எங்களுக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை என்பதால், தாங்களும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article