கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 2 பேருந்துகள் எரிந்து நாசம்

Must read

சென்னை:

க்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அருகருகே  நின்றுகொண்டிருந்த 2 பேருந்துகள் தீயில் எரிந்து நாசமானது.

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 பேருந்துகளில் இன்று மாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மாலை நேரத்தில்,  காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த பேருந்துகளிலும் மளமளவென தீ பரவியது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் யாரும் பேருந்துகளில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

More articles

Latest article