டெல்லி:  தலைநகர் டெல்லியில் உள்ள  இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி  பஞ்சாபி பாகில் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை. இந்த மருத்துவமனை கட்டிடத்தின் 3வது மாடியில் இன்று மதியம் திடீரேன  தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து பத்திரமாக அகற்றப்பட்டனர். விரைந்த வந்த  தீயனைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன் தீயையும் அணைத்தனர்.

மதியம் 1.16 மணிக்கு தீ பிடித்ததாகவும், 7  தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]