பாலியல் வன்கொடுமை வழக்கில் கலாக்ஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதாகக் கூறி மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவி அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து கலாஷேத்ரா கல்லூரியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.