நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அமெரிக்கா பயணம்!

டில்லி,

நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். இங்கு  உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். அவருடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் மற்றும  நிதி அமைச்சக அதிகாரிகளும் செல்கிறார்கள்.

அமெரிக்க செல்லும் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, அங்குளள உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் சார்பில் நடைபெறும் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்துவார்  என்றும்,  அமெரிக்க வர்த்தக செயலாளர், இத்தாலி மற்றும் ஈரானிய நிதி அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்   வரும்  10 ம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் சாதனைகள் மற்றும் சவால்கள் குறித்து அருண் ஜெட்லி உரையாற்ற இருப்பதாகவும் அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.