சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளி‘யிடப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம)நிதி(பொ) எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப,  இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) திரு.குலாம் ஜிலானி பாபா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2022 முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 32,579. வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,70,125 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,07,831 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2023–ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 9.-11.-2022 அன்று வெளியிடப்பட்டன.

1.1.2023 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 9.11.2022 முதல் 8.12.2022 முடிய பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்றத் தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2023–ம் ஆண்டிற்கான துணைப் பட்டியல்களுடனான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துணைப் பட்டியல்களுடனான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம்.

கடந்த 9.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தினைச் சார்ந்த 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம்.

ஆண்கள் – 19,15,611, பெண்கள் – 19,75,788, இதரர் – 1,058. மொத்தம் – 38,92,457

2023–ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக 57,437 பெயர் சேர்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–

ஆண்கள் – 27,398, பெண்கள் – 29,967, இதரர் – 72. மொத்தம் – 57,437.

மேற்படி பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய ஆணை பிறப்பிக்கபட்டு, துணைப்பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களது எண்ணிக்கை 54,347 அதன் விவரம் வருமாறு:–

ஆண்கள் – 25,980, பெண்கள் – 28,295, இதரர் – 72. மொத்தம் – 54,347.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது களஆய்வின் போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்ய கோரி வரப்பெற்ற படிவம்- 7–ன் எண்ணிக்கை 65,459 ஆகும். அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்கு பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,527 ஆகும். மேலும், எந்த பெயர்களும் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக நீக்கம் செய்யப்படவில்லை.

மேலும், இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து உரிய நடைமுறையை பின்பற்றி இறந்துபோன, நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பலமுறை பட்டியலில் பதிவுகள் ஆகிய பெயர்கள் தொடர் திருத்தம் மற்றும் சிறப்பு சுருக்கத் திருத்த காலங்களில் நீக்கம் செய்யப்பட்டவர்களின் மொத்தஎண்ணிக்கை விவரம் வருமாறு:–

ஆண்கள் – 32,079, பெண்கள் – 32,430, இதரர் – 18. மொத்தம் – 64,527.

மேற்குறிப்பிட்ட 64,527 நீக்கம் செய்யப்பட்ட பெயர்களில் 372 இறந்தவர்கள், 63,846 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் 309 பலமுறை பட்டியலில் பதிவு.

இன்று வெளியிடப்பட்ட இறுதி திருத்தப் பட்டியலுக்கு பின்னர் சென்னை மாவட்டத்தில் அமையப்பெற்ற 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர்களது எண்ணிக்கை விவரங்கள் வருமாறு:–

  1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

ஆண்கள் – 1,15,556 , பெண்கள் – 1,24,096, இதரர் – 101. மொத்தம் – 2,39,753.

  1. பெரம்பூர்

ஆண்கள் – 1,37,693, பெண்கள் –1,42,108, இதரர் – 74. மொத்தம் – 2,79,875.

  1. கொளத்தூர்

ஆண்கள் – 1,35,524, பெண்கள் –1,41,602, இதரர் – 72. மொத்தம் – 2,77,198.

     4. வில்லிவாக்கம்

ஆண்கள் – 1,17,758, பெண்கள் –1,22,175, இதரர் – 61. மொத்தம் – 2,39,994.

  1. திரு.வி.க.நகர் (தனி)

ஆண்கள் – 1,03,138, பெண்கள் –1,09,129, இதரர் – 52. மொத்தம் – 2,12,319.

  1. எழும்பூர் (தனி)

ஆண்கள் – 94,640, பெண்கள் –96,141, இதரர் – 55. மொத்தம் – 1,90,836.

     7. ராயபுரம்

ஆண்கள் – 92,833, பெண்கள் –96,789, இதரர் – 60. மொத்தம் – 1,89,682.

  1. துறைமுகம்

ஆண்கள் – 88,396, பெண்கள் –81,670, இதரர் – 59. மொத்தம் – 1,70,125.

  1. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி

ஆண்கள் – 1,13,338, பெண்கள் –1,17,271, இதரர் – 48. மொத்தம் – 2,30,657.

  1. ஆயிரம் விளக்கு

ஆண்கள் – 1,14,219, பெண்கள் –1,19,161, இதரர் – 99. மொத்தம் – 2,33,479.

     11. அண்ணாநகர்

ஆண்கள் – 1,34,137, பெண்கள் –1,39,337, இதரர் – 87. மொத்தம் – 2,73,561.

  1. விருகம்பாக்கம்

ஆண்கள் – 1,37,845, பெண்கள் –1,39,019, இதரர் – 91. மொத்தம் – 2,76,955.

  1. சைதாப்பேட்டை

ஆண்கள் – 1,31,509, பெண்கள் –1,36,145, இதரர் – 87. மொத்தம் – 2,67,741.

  1. தியாகராயநகர்

ஆண்கள் – 1,13,908, பெண்கள் –1,16,740, இதரர் – 46. மொத்தம் – 2,30,694.

  1. மயிலாப்பூர்

ஆண்கள் – 1,26,873, பெண்கள் –1,34,667, இதரர் – 37. மொத்தம் – 2,61,577.

  1. வேளச்சேரி

ஆண்கள் – 1,52,145, பெண்கள் –1,55,603, இதரர் – 83. மொத்தம் – 3,07,831.

16 சட்டமன்றத் தொகுதிகளில் ஆண்கள் –19,09,512, பெண்கள் –19,71,653, இதரர் –1,112. மொத்தம் – 38,82,277.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப் பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை, கடந்த 9.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினை விட 10,180 குறைவு. இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை விட 0.26 சதவீதம் குறைவு.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) குலாம் ஜிலானி பாபா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.