டெல்லி; கனிமொழியின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கனமொழி, வேட்புமனுவில், தனது கணவரின் வருமான வரிக்கணக்கு எண்ணை குறிப்பிடவில்லை, அதனால், அவரது மனுவை ஏற்றது தவறு என்றும், அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்ததார்.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதை எதிர்த்து, கனிமொழி உச்சநீதிமன்ற்ததில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கனிமொழி வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு ஒராண்டு காலமாக கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில்,  கனிமொழி வழக்கு மீண்டும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,  2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்வது அவருக்கு பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.  மேலும் கனிமொழி கணவரிடம் பான் கார்டு இல்லை என்று தனது வேட்புமனு பதிவேடுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியவர், இதில் முதல் பிரதிவாதி (குமார்) இந்தக் கூற்று தவறு என்று வாதிட்டால், அந்த அறிக்கை தவறானது என்ற குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும் என்றவர், மனுதாரரின் கணவரின் வருமான வரி ஆதார் எண் தொடர்பாக, தேர்தல் மனுவில், உயர் நீதிமன்றத்தின் தரப்பில் குறைகள் சேர்க்கப்படுவது நியாயமா என்று கூறியவர், “மனுதாரரின் மனைவிக்கு சிங்கப்பூரில் பான்கார்டு அல்லது அதுபோன்ற ஏதேனும் அட்டை உள்ளது என்று தேர்தல் மனுதாரர் கூட ஒப்புக்கொள்ளாத நிலையில், உயர்நீதிமன்றம் அத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தது சரியானதா?” என்று மனுவில் கேட்டிருந்தார்.

அப்போது எதிர்மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமதி.கனிமொழியின் வேட்புமனு முறையற்றது என்ற தனது வழக்கை நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு உண்மையையும் கொண்டு வரவில்லை என்று வாதிட்டார். அதை ஏற்க மறுத்த மூத்த வழக்கறிஞர் வில்சன், உண்மையில், தேர்தல் மனுவில் வெற்றுக் குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவித்தார். வில்சனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், கனிமொழியின் தேர்தல் வெற்றி எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தொடருகிறது. என்றும், எதிர்மனுதாரர் சந்தானகுமாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக பட்டியலிடப்படுமாறு பதிவாளருக்கு தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டார்.  இதனால், உச்சநீதி மன்றத்தில் விரைவில் இறுதி விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.