சென்னை

       நோய்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களை விட மனதளவில் அதிக பாதிப்புகளையும், கவலைகளையும் உண்டாக்குபவை. கொரோனா உள்ளிட்ட கொள்ளை நோய்கள்- தொற்று நோய்கள் மனித இனத்தின் மனவளத்தையும் அடியோடு சிதைக்கும் தன்மை கொண்டவை.

       இத்தொற்று நோய்கள் தாக்கும்போது உடலில் அறிகுறிகள் தோன்றுவது போல் மனதிலும் எதிர்மறைச் சிந்தனைகள் வெளிப்படும் என மனநல மருத்துவர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

        * தன் உடல்நலம், குடும்ப நலம் பற்றி அதிக கவலை

        *தூக்கமின்மை, பசியின்மை, அதீத சோர்வு

        *தற்கொலை எண்ணம் தோன்றல்

         * தனது செயலற்ற நிலை பற்றிய எரிச்சல், கோபம்

         *நோய் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் மற்றும் புதுப் பழக்க வழக்கங்கள் தோன்றுதல்.

          எனவே இந்நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர் தன் மனவலிமையை அதிகரிக்க வேண்டும். அதீத  பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். கொரோனா பற்றி உலக சுகாதாரக் கழகம், “இந்நோய் கொடிய விளைவுகளை ஏற்படுத்தினாலும், உலகின் மிக உன்னதத் தன்மைகளையும் அடையாளப் படுத்துவது எனக் கூறியுள்ளது.

          அந்தவகையில் மனவலிமையோடு நம்மை தனிமைப் படுத்திக் கொண்டு,  சிகிச்சைகளால் குணம் பெற்று,  உறவுகளுடன் மீண்டும் நம்பிக்கையுடன் இணையும்   அந்த நொடிகள் வாழ்வின் உன்னதத் தருணங்களாகும். கொரோனாவை வெல்ல மருந்துகளோடு மனவலிமையும் கட்டாயத் தேவையாகும்.