சென்னை:
மிழ்நாட்டில் 12,500 கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு தங்கு தடையின்றி Fiber Net மூலம் இணைய சேவை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு முழுவதும் கிராமங்களுக்கு தங்குதடையின்றி இணைய சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் கிராமங்களுக்கு தங்குதடையின்றி fiber net மூலம் இணைய சேவை வழங்கப்படும். கிராமங்களுக்காக இணைய சேவை திட்டத்தின் மூலம் சுமார் 12,500 கிராமங்கள் பயன்பெறும்.

இந்தத் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஒரு வருடம் வரை ஆகும் என்பதால், மாற்று ஏற்பாடாக மற்ற இணைய சேவை அமைப்புகளை ஒருங்கிணைத்து கிராமப்பகுதிகளுக்கு இணைய சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை அவர்களே குப்பையில் போட்டுவிட்டனர். பல திட்டங்கள் தரமற்ற முறையில் உள்ளன. பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. இந்த திட்டங்களை சர்இ செய்வதே பெரும் சவாலாக இருக்கிறது.

தற்போதைய தி.மு.க ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் மீட்கப்படும். மேகதாது அணை விவகாரத்தில் தெளிவான முடிவை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார்.” என்றும் தெரிவித்துள்ளார்.