சென்னை: மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து, சென்னையில் பணியாற்றும்  மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று  ஆர்ப்பாட்டம்! நடத்தினர்.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற முக்கியமான லாபம் ஈட்டும் நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இநத் நிலையில், சென்னை சாஸ்திரிபவனில் பணியாற்றும் மத்தியஅரசு ஊழியர்கள்,  பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை கண்டித்து,  மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் சார்பில், கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரை பாண்டியன், மத்திய அரசு,  தொடர்ந்து அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு  மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.  தற்போது இந்திய பாதுகாப்பு துறையில் உள்ள 41 தளவாட உற்பத்தி நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை  மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்றும்,  பாதுகாப்பு துறையில் வேலை நிறுத்திற்கு தடை என்கிற அவசர சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு கூறினார்.