வாஷிங்டன்

மெரிக்க உணவு மற்றும் மருத்து நிர்வாகம் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது.

உலகெங்கும், கொரோனா பரவல் அதிகரித்த நேரத்தில் இருந்தே அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகளின் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.  அவ்வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் நிறுவனம் கொரோனா சிகிச்சைக்காக மாத்திரையை உருவாக்கி உள்ளது.  இந்த மருந்தை அவசர பய்ன்பட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரி நிறுவனம் விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பேக்லொவிட் என்னும் இந்த மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்டோர் அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.  இந்த மருந்து லேசானது முதல் மிதமானது வரையில் உள்ள கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.  பரிசோதனையில் மருந்துக்கு நல்ல செயல் திறன் உள்ளதாகத் தெரிய வந்துள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இது குறித்து, ” ஃபைசர் நிறுவனத்தின் பேக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் உள்ளிட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம்.  இந்த மருந்தைச் சாப்பிடத் தகுதியான குழந்தைகள்  குறைந்தபட்சம் 40 கிலோ எடையுள்ளவர்களாக  இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.