ர்பன்

மிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்கா தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது பல உலக நாடுகளில் பரவி உள்ளது.  இதனால் ஒரு சில நாடுகளில் கொரோனா அடுத்த அலை ஏற்பட்டு பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன.  இதையொட்டி உலகெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

தென் ஆப்ரிக்க நாட்டின் தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் 80% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது. ஆயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கு வரும் நோயாளிகளுக்கு மற்ற திரிபுகளால் ஏற்படும் ஆபத்திற்கு இணையான ஆபத்தும், அச்சுறுத்தலும் இருக்கும்.

கடந்த நவம்பர் 25 அன்று முதன்முதலாகத் தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளால் உருமாறிய  ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.  கடந்த ஏப்ரலில் இருந்து நவம்பர் வரையிலான காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட டெல்டா பாதிப்புகளை ஒப்பிடும்போது இப்போதுள்ள ஓமிக்ரான் பாதிப்பால் ஏற்படும் நோய்த் தீவிரம் 70% குறைவாக இருக்கிறது.

ஒமிக்ரான் கண்டறியப்பட்டதில் இருந்து பரவல் மிக மிக அதிகமாக இருக்கிறது.  ஓமிக்ரான் தொற்றாளர்கள் அதிகளவில் வைரஸ் சுமையைச் சுமக்கின்றனர். அதனாலேயே பரவும் தன்மையும் அதிகமாக உள்ளது  ஆயினும் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரஸால் பாதிப்பு 80%க்கும் குறைவு” என அறிவிக்கப்பட்டுள்ளது  இது உலக மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமையும் எனக் கூறப்படுகிறது.