டில்லி

டில்லியில் சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம்  திரும்பப் பெறப்பட்டது.

கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.  பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தலைநகர் டில்லியில் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தொடர் போராட்டம் நடத்தினர்.   இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் சுமார் ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு பாஜக அரசு அடி பணிந்தது.   அதன்படி மத்திய அரசு தான் கொண்டு வ்ந்த வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.  மேலும் வேளாண் பொருட்கள் ஆதார விலை குறித்து பேச்சு வாத்தை நடத்தவும் தயார் என மத்திய பாஜக அரசு அறிவித்தது.

இந்த உறுதி மொழியை ஏற்று வரும் டிசம்பர் 11 ஆம் தேதியில் இருந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என விவசாயிகள் அறிவித்தனர்.  அதன்படி விவசாயிகள் தங்கள் ஓராண்டு போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.  தற்போது அவர்கள் தங்கள் கூடாரங்களை காலி செய்து வீட்டுக்குப் புறப்படத் தயாராகி வருகின்றனர்.