டில்லி

நேற்று மரணம் அடைந்த முப்படை தளபதிக்கு இரங்கல் தெரிவிக்க மாநிலங்களையில் அனுமதிக்கவில்லை என திமுக எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் இருந்து முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத், மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் நேற்று பிற்பகல் ஹெலிகாப்டரில் செய்தனர்.  குன்னூர் அருகே இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிர் இழந்தனர்.

இதில் பயணம் செய்த குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது ராணுவ மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சையில் உள்ளார்.  அவரைக் காக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த தகவல்களைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்த போதிலும் முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசக் கூட மாநிலங்களவையில் அனுமதி அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி உள்ளார்.