டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்  மீண்டும் தொடங்கி உள்ளது. இதையடுத்து டெல்லி எல்லையில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினல் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் ஓராண்டு வரை போராடிதைத் தொடர்ந்து, அந்த சட்டங்களை மத்தியஅரசு வாபஸ் பெற்றது இந்த நிலையில், தற்போது  விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து மீண்டும் விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

அதன்படி. இன்று டெல்லி  ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் தொடங்கி உள்ளது. ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக இந்த போராட்டத்தில்  நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக, அந்த அமைப்பின் தலைவர் திகாயத் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சூழலில்,  அண்டை மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி மற்றும் டெல்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  டெல்லியின் அனைத்து எல்லைகளில் தடுப்புகளை வைத்து காவல்துறை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக,  முதலே உத்தரபிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் நேற்றே டெல்லி  நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, போராட்டம் நடைபெறும் இடங்களிலும், டெல்லி எல்லையில் நுழையும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏற்கனவே விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அப்படியொரு சூழல் உருவாக மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.