கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு: விஷ பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம்

Must read

மயிலாடுதுறையில் கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம், எரிவாயு  குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை அருகே முக்கறும்பூர் பருத்தி வயலில் விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, அப்பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போராட்டம் தொடர்பாக விசாரிக்க, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சென்றுக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article