டில்லி,

நாடு முழுவதும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இது குறித்த பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கின்  இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு வழக்கறிஞர், விவசாயிகள் தற்கொலை  பிரச்னையை  ஒரே இரவில் தீர்த்து விட முடியாது என கூறினார்.

மத்திய அரசின் இந்த  உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற உத்தரவிட்டது.

மேலும், மத்தியஅரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும்,  விவசாயிகள் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், மத்திய அரசின் நலத்திட்டங்கள் 40% விவசாயிகளை சென்றடைந்துள்ளன என்றும், 2018 ஆம் ஆண்டிற்குள் 50% விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடையும் என்றும் கூறினார்.

மேலும், விவசாயிகள் தற்கொலைப் பிரச்னைக்கு ஒரே இரவில் தீர்வு கண்டு விட முடியாது எனவும் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட  உச்ச நீதிமன்றம்  6 மாதத்திற்குள் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.