போலி சர்டிபிகேட்: பதவியை பறிக்க உச்சநீதி மன்றம் அதிரடி!

டில்லி,

போலி சர்டிபிகேட் கொடுத்து அரசு பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தால், அவர்களின் பதவியை பறிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் படிப்பு குறித்த போலியா சான்றிதழ் (சட்டிபிகேட்) கொடுத்து அரசு வேலைகளை பெற்று விடுகின்றனர்.

இதுபோன்று போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களை மகாராஷ்டிரா அரசு பணி நீக்கம் செய்திருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசின் உத்தரவு செல்லாது என் மும்பை உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறியிருந்தது.

அதையடுத்து, மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்தவழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தாலோ அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அவர்களின் பதவியை பறிக்கலாம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

 

 


English Summary
if got job from Fake Certificate, remove the post, Supreme Court order