டெல்லி: விவசாயிகள் பிரச்சினைக்கு மத்தியஅரசு தீர்வு காணாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகள்  முடிவு செய்ய இருப்பதாக சரத்பவான் தெரிவித்து உள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டம் ஒரு மாதத்தை கடந்த நிலையில் இன்று மத்தியஅரசுடன் விவசாயிகள் அமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் உடன்பாடு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வேளாண் மந்திரியுமான சரத்பவார்,  விவசாயிகள்  விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி குற்றம் சாட்டுவது அழகல்ல. அவர்   ‘விவசாயிகளின் போராட்டத்தை மதீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் முடிவு காண வேண்டும்.

இன்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குகொண்டு வர மத்தியஅரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய பேச்சுவார்த்தையில்  தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத் தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு செய்வோம்’ என்று கூறினார்.

மேலும்,  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்  குழுவுக்கு ,  அவர்கள்  சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த ஆழ்ந்த புரிதல் கொண்ட தலைவர்களை இந்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஈடுபடுத்தி இருக்க வேண்டும் என்றவர்,  தான் மத்திய  வேளாண் மந்திரியாக இருந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து வேளாண் துறையை சீர்திருத்த நடவடிக்கை எடுத்ததை சுகட்டிக்காட்டியவர்,  பா.ஜனதா எடுத்திருக்கும் இதுபோன்ற வழியில் அதை செயல்படுத்த முனையவில்லை என்றும், தற்போதைய அரசு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளதால்தான் இவ்வளவு பிரச்சினை  என்று குற்றம் சாட்டினார்.

ஆட்சியாளர்கள் டெல்லியில் அமர்ந்துகொண்டு விவசாயம் செய்ய முடியாது  என்று தெரிவித்த சரத்பவார்,  இந்த பிரச்சினையானது அது தொலைதூர கிராமங்களில் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.