*** ” சர்ச்சைக்கு உரிய அந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குவதாக பிரதமர் மோடி அறிவித்து விட்டார்… தெரியுமா? ” என்று நண்பர்கள் சொன்ன போது என்னால் நம்பவே முடியவில்லை…!

ஏதோ ஒரு விஷயம் அதில் புதைந்து இருந்ததை உணர்ந்தேன்… ” அட.. இன்னும் சில மாதங்களில் முக்கியமான சில வட இந்திய மாநிலங்களில்… குறிப்பாக கொதிப்பில் தகிக்கும் உத்திரப் பிரதேசம், பஞ்சாப் மாநில விவசாயிகள், வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி ஆட்சிக்கு எங்கே முடிவுரை எழுதி விடுவார்களோ என்ற பயத்தில் தான் மிரண்டு போய் அவசர கதியில் இந்த ‘வாபஸ்’ முடிவை அறிவித்திருக்கிறார்” என்பது என்னைப் போலவே அகிலத்துக்கும் புரிந்தது!

ஆனால், கடந்த ஒரு வருடமாகத் தங்கள் உடல்… பொருள்.. ஆவியைத் தந்து ஒன்றிய அரசின் பயங்கர வாதத்தை எதிர்த்து நின்ற உழவர் போராளிகள், மோடியின் கபட நாடகத்தை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்!

ஆகவே தான், முக்கியமான ஆறு அம்சக் கோரிக்கைகளை ஒன்றிய அரசுக்கு வைத்து ,’முதலில் அவற்றை நிறைவேற்றினால் தான் எங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம்… இல்லை என்றால் ஒன்றிய அரசை எதிர்த்து எங்கள் போராட்டம் தொடரும்’ என்று உறுதியாக அறிவித்து விட்டார்கள்!

** இப்போது சங்கடத்தில் நெளிந்து கொண்டிருக்கிறது மோடி அரசு!!

*** ஓவியர் இரா. பாரி.