சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் முறைப்படுத்தப் பட்டது. இந்ததிட்டத்தின் நோக்கமானது,  புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்றநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரித்தல்,  வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல் ஆகும்.

மேலும்,  சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல் – மாநில அரசு திட்டம் (100%), ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டம், பிரதம மந்திரி வேளாண் நீர்ப் பாசனத் திட்டம், ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் – துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த திட்டங்களில் உள்ள நிதி ஆதாரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த திட்டங்களுக்க 100 சதவிகிதம் மானியமும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில்,  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் தெரிவு செய்யப்பட்ட 1997 கிராமங்கள் இணைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட 1997 கிராமங்களின் திட்டபகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்,  தேர்ந்தெடுக்கப்பட்ட 1997 கிராமங்களின் திட்டபகுதிகளில் உள்ளஆதிதிராவிடர்/ பழங்குடியினர், சிறு குறு விவசாயிகள் இணைந்து பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை (ம) உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை 2022 – 2023 ஆம் ஆண்டில் 3,204 கிராமங்களில் செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்-