டில்லி,
விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய பழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு பதில் மக்கள் வைத்திருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன் காரணமாக பழைய பணத்தை கொடுத்து புதிய நோட்டுகள் வாங்க,  வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதியது.
ஆனால், போதுமான அளவுக்கு புதிய பணம் வராததால்  மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும்பணப்பிரச்சனை இதுவரை தீரவில்லை.
இதைத்தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள  மின் வாரியம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என  மத்திய அரசு ஆணையிட்டது. ஆனாலும் சில்லரை தட்டுபாட்டினால் அங்கும் பணப்பிரச்சினை ஏற்பட்டது.
foremr3
புதிய நோட்டு பிரச்சினையால் இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள், விவசாய கடன் வாங்க முடியாமல் தவித்தனர். இதனால் பிரச்சினை மேலும் அதிகரித்த்தது.
இதைத்தொடர்ந்து,   விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயத்திற்கு தேவையான விதைகளை வாங்கிக்கொள்ளலாம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தேசிய, மாநில விதை மையங்கள், வேளாண் மையங்கள், பொதுத்துறை கழகங்களில் விவசாயிகள் பழைய 500 ரூபாயை கொடுத்து விதைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள லாம் என என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.