சென்னை: விவசாயிகள் பிரச்சினை, காவிரி பிரச்சினை என, தமிழக விவசாயிகளை டெல்லி சென்று கோமணத்துடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர் அண்ணாக்கண்ணு கடந்த 3 ஆண்டுகளாக காணமல் போன நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளார். டெல்லியில் போராட்டம் நடத்த தனது ஆதரவு விவசாயிகளுடன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தலைநகர் டெல்லி சென்று கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளளாராம். அய்யாக்கண்ணுடன் 200 விவசாயிகளும் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த டெல்லியில் கோமணத்துடன் போராட்டம் நடத்துவார்களா அல்லது, வடமாநில விவசாயிகள் போல பேன்ட், குர்தா அணிந்து போராட்டம் நடத்துவார்களா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவராக இருந்து வருபவர் விவசாயி அய்யாக்கண்ணு. சொகுசு கார் உள்பட உச்சப்பட்ட வசதியுடைள அய்யாக்கண்ணு அவ்வப்போது விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் அவருக்கு ஆதரவாக விவசாயிகளை டெல்லி அழைத்துச்சென்று போராடி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு டெல்லியில் 100 நாள் போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தின்போது, விவசாயிகளை கோமணத்துடன் அமர வைத்ததுடன், மண்டைஓடு, பிச்சைப்பாத்திரம் ஏந்த வைத்து என பல்வேறு வகையில், போராட்டம் நடத்தினார் ஆனால், அவரது போராட்டத்தை மத்தியஅரசும், வடமாநில விவசாய அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அய்யாக்கண்ணுவின் போராட்டத்தையும் காணவில்லை. அவரையும் காணவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக எந்தவித கோரிக்கைக்காகவும் போராடாத அய்யாக்கண்ணு, தற்போது மீண்டும் டெல்லி சென்று போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். அவரது தலைமையில் 200 விவசாயிகள் டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து நேற்று ( 21ந்தேதி), திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சன்றனர்.
விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்