சென்னை: சீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
விவசாயிகளுக்கு, வேளாண் சட்டங்கள் மூலம் முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே விவசாய பொருள்களை விற்பனை செய்யலாம். மாநில வேளாண் சந்தைகள் மாற்றப்படவில்லை.
எவ்வளவு பொருள்களை, என்ன விலைக்கு, யாரிடம் விற்பது என்பதை விவசாயிகளே முடிவு செய்யலாம். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டங்கள் கொண்டு வந்திருப்பது ஒரு சீர்திருத்த முயற்சியே. விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட 8 முதல் 8.5 சதவீதம் வரி இனி இருக்காது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.