சென்னை

பிரபல தமிழ் நடிகரான நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான நிதிஷ் வீரா புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக் குழு, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் புதுப்பேட்டையில் சோனியா அகர்வாலின் சகோதரராக நடித்து பெரும் புகழ் பெற்றவர் ஆவார்.

மேலும் வெண்ணிலா கபடிக்குழு படத்திலும் இவரது நடிப்பு புகழ் பெற்றது.  காலா திரைப்படத்தில் இவர் ரஜினிகாந்த் மகனாக நடித்ததால் மிகவும் புகழ் அடைந்தார்.  இவருக்குச் சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதையொட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிதிஷ் வீராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சை பலனின்றி நிதிஷ் வீரா உயிர் இழந்தார்.   இளம் நடிகரான நிதிஷ் வீரா உயிரிழப்பு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.