பிரபல திரைப்பட இயக்குநர் சுபாஷ் காலமானார். பழம்பெரும் இயக்குநர் கிருஷ்ணன் (கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையர்) அவர்களின் மகனான இவர் கலியுகம், உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா, நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சபாஷ் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்தி திரையுலகிலும் வெற்றிகரமான திரைக்கதாசிரியராகத் திகழ்ந்தவர் இவர்.
உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமான சுபாஷூக்கு வயது 57. அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.