பிரபல ஓவியராக விளங்கிய வாணி இன்று சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 89.
ஆனந்த விகடன் இதழில், மெரினா, மணியன் உட்பட பிரபல எழுத்தாளர்கள் பலரது படைப்புகளுக்கு ஓவியம் வரைந்தவர் வாணி. இவரது இயற்பெயர் வெங்கட்ரமணி.
மனைவி ஜானகி வீணை இசைக் கலைஞர். மூன்று மகள்கள், ஒரு மகன். மகள்களில் ஒருவரான ரேவதி, “கல்கி” வார இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார். மருமகன் எம்.பி. உதயசூரியன் “புதிய தலைமுறைட வார இதழின் ஆசிரயராக பொறுப்பு வகிக்கிறார்.
முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வாணி, இன்று காலமானார்.