பாட்னா

பிரபல கணித  அறிஞர் வசிஷ்ட நாராயண் சிங் இன்று பாட்னாவில் மரணம் அடைந்தார்.

உலகப் புகழ் பெற்ற வசிஷ்ட நாராயண் சிங் கடந்த 1942 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இரண்டாம், தேதி பிறந்தார்.   இவர் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தியரி எனப்படும் சார்பியல் கோட்பாடு குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.  இது மிகவும் சர்ச்சையை உருவாக்கியது.

கடந்த 40 வருடங்களாக இவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  தற்போது 77 வயதாகும் இவர் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்தபூர் என்னும் ஊரில் வசித்து வந்தார்.  முதுமை காரணமாக இவர் உடல்நலம் குன்றி இருந்தார்.

அதையொட்டி அவர் பாட்னா நகரில் உள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் உடல்நிலை தேறியதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.  ஆனால் அவர் உடல் நிலை திடீரென சீர் கெட்டு மூச்சு விட முடியாத நிலை எற்பட்டுள்ளது.

உடனடியாக மீண்டும் அவரை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.  அங்கு அவர் மரணம் அடைந்துள்ளார்.  இந்த செய்தியை அவருடைய உறவினர் உறுதிப்படுத்தி உள்ளார்.