பெங்களுரு:

ர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.  இந்த தேர்தலில்  பாஜக பெரும்பாலான வார்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

ர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது இதில், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் அதிக இடங்களை  பெற்றிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இது மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, 28 தொகுதிகளில்,  25 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பாஜகவின் வாக்கு வங்கி சரிந்து, பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கர்நாடகத்தில் 61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1300 வார்டுகள் என மொத்தம் 1361 வார்டுகளில்  தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 509 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 366 வார்டுகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 174 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 160 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.

அதுபோல,  290 நகர பஞ்சாயத்து வார்டுகளில் பாஜக 126 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 97 வார்டுகளை வென்றுள்ளது.  மஜக 34 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  நகராட்சி வார்டுகளில் காங்கிரஸ் முடிவு அறிவிக்கப்பட்ட 714 நகராட்சி வார்டுகளில் பாஜக 184 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 322 வார்டுகளை கைப்பற்றி முன்னணியில் உள்ளது. மஜத 102 இடங்களை கைப்பற்றியுள்ளது.  217 மாநகராட்சி வார்டுகளில் பாஜக 56 இடங்களையும் காங்கிரஸ் 90 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.  மஜத 38 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில், பல்லாரி (63), சிக்கபல்லபுரா (62), சிக்மகளூர் (23), தக்ஷின கன்னடா (60), தாவனகரே (45), தர்வாட் (19), கோலார்  (101) ரமணகர (54), சிவமோகோ (11) உள்பட 9 மாவட்டங்களில் காலியாக இருந்த 418 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில 408 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில் பாஜக, 124 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 148 இடங்களையும், மதசார்பற்ற ஜனதாதளம் 62 இடங்களையும், சிபிம் 1 இடத்தை மற்றவர்கள் 23 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்றும், மாநிலத்தில், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களை விலைக்குவாங்கி ஆட்சியை பிடித்தும், மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி, உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வி அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்களிடையே பாஜக மீதான அதிருப்தி நிலவி வருவது,  இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்டு உள்ளது. இது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.