சென்னை

பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலை மரணம் அடைந்தார்.

பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா (வயது 70) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். இவர் கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மறைந்த மூத்த நடிகர் பாலையாவின் மகன் என்பதால் இவர் ஜூனியர் பாலையா என அழைக்கப்பட்டுப் புகழ் பெற்றார்.  இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஜூனியர் பாலையாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வளசரவாக்கம் இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.

ஜூனியர் பாலையாவின் மறைவு அவரது ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

மறைந்த ஜூனியர் பாலையாவின் உடலுக்கு திரையுலகினர், நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பின், நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் எனக் கூறப்பட்டு உள்ளது.