சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம்

Must read

சென்னை:
சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளை பெறுவதற்காகவும், ஏற்கனவே இருக்கும் குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்காகவும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் குடும்ப அட்டையில் மாற்றங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில், அனைத்து மண்டலங்களிலும் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும்.

நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும்.

More articles

Latest article