மும்பை: பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையின்  தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இது கொரோனா பரவலின் 3வது அலை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பழம்பெரும் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அவர்,  மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (ஐசியு பிரிவில்) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளது.

[youtube-feed feed=1]