ஐபிஎல் தொடரின் டைட்டிலை கைப்பற்றியது டாடா…! இனி ‘டாடா ஐபிஎல்’

Must read

மும்பை: ஐபிஎல் தொடரின் டைட்டிலை டாடா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக இதுவரை விவோ ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வந்த ஐபிஎல் போட்டிகள் இனி  ‘டாடா ஐபிஎல்’ என அழைக்கப்பட உள்ளது. ஐபிஎல் 2022, ஐபிஎல்2023 ஆகிய இரு ஆண்டுகளிலும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும்.

2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால், ஐபிஎல் போட்டியின் ஒவ்வொரு நிகழ்வும் வியாபாரமாகி வருகிறது. ஐபிஎல் டைட்டில் உள்பட, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் என அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பார்னசருக்கும், வீரர்களை ஏலம் எடுப்பதிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே விளையாட்டி வந்த ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு (2022) முதல் 10 அணிகள் விளையாட உள்ளன. அதன் காரணமாக அணியின் டைட்டில் உள்பட அணி வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த  நிலையில், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்கான போட்டி நடைபெற்றது. அதை இந்த ஆண்டு டாட்டா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஐபிஎல் போட்டி முதன்முறை யாக தொடங்கியது, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக  டி.எல்.எஃப் இருந்தது, பின்னர் அதை  பெப்சி  கைப்பற்றியது. ஆனால், கடந்த  2016-ல் இருந்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.440 கோடி செலுத்தி வந்தது.

ஆனால், கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால்,  ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து விவோ நீக்கப் பட்டது. அதையடுதுது ஐபிஎல் ஸ்பான்சரை,  ரூ.222 கோடிக்கு டிரீம் 11 நிறுவனம் கைப்பற்றியது. ஆனால், 2021ம் ஆண்டு மீண்டும் விவோ நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது.

இந்த நிலையில்  2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார். ஸ்பான்சர்ஷிப் மாற்றம் குறித்த முடிவு  இன்று (செவ்வாய்கிழமை)  நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

​​2022 மற்றும் 2023 சீசன்களுக்கான உரிமையை அடிப்படையாகக் கொண்ட கிரிக்கெட் லீக்கின் தலைப்பு ஸ்பான்சர்ஷிப்பை TATA பெறும். இந்த இரண்டு சீசன்களுக் கான சரியான நிதி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 2023 சீசனுக்குப் பிறகு, ஸ்பான்சர்ஷிப் உடன்படிக்கை மீண்டும் ஒருமுறை கைப்பற்றப்படும்.

“100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மற்றும் ஆறு கண்டங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் டாடா குழுமம் உலகளாவிய இந்திய நிறுவனங்களின் சுருக்கமாக இருப்பதால், பிசிசிஐ ஐபிஎல்-க்கு இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். டாடா குழுமம்  சர்வதேச எல்லைகளில் கிரிக்கெட்டின் உணர்வை ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளது மற்றும் உலகளாவிய விளையாட்டு உரிமையாக ஐபிஎல் பிரபலமடைந்து வருவதால், ஐபிஎல் டைட்டிலை டாடாப பெற்றுள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

“இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான வணிகக் குழுக்கள் ஐபிஎல் வளர்ச்சிக் கதையில் நம்பிக்கை வைத்திருப்பதில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம், மேலும் டாடா குழுமத்துடன் இணைந்து, இந்திய கிரிக்கெட்டையும் ஐபிஎல்லையும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்போம்” என்றும் ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More articles

Latest article