சென்னை:
நாளிதழ்களில் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். சென்னையில் உள்ள 9 தொகுதிகளில் ஸ்டாலின் இறுதிக்கட்டப் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டபோது கலைஞர் எனக்காக வாக்கு சேகரித்து நினைவுக்கு வருகிறது.

திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். வீட்டிற்கு வந்த அதிகாரிகள் ஒன்றும் கிடைக்காததால் டிவி பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டு விட்டு சென்றார்கள். தோல்வி பயத்தால் திமுக மீதான குற்றச்சாட்டுகளை நாளிதழ்களில் 4 பக்க விளம்பரமாக அதிமுக வெளியிட்டுள்ளது. குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது என ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பு பார்த்து அதிமுகவினர் அச்சத்தில் உள்ளனர். பொய்யான செய்தியை முதல் பக்கத்தில் விளம்பரம் செய்து மக்களை திசைதிருப்பி வெற்றிபெற நினைக்கிறார்கள். எங்கள் மீது தவறு இருந்திருந்தால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். திமுகவினர் மீது 10 ஆண்டுகளில் ஒரு வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லையே என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறினார்.