சென்னை:
சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக வேளச்சரியில் 24 ஆயிரத்து 414, விருகம்பாக்கத்தில் 23 ஆயிரத்து 073, சைதாப்பேட்டையில் 19 ஆயிரத்து 883, அண்ணாநகரில் 19 ஆயிரத்து 506 பேரும், போலி வாக்காளர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.