போலி பாஸ்போர்ட்: சென்னை போலீஸ்காரர் அதிரடி கைது!

சென்னை,

போலி பாஸ்போர்ட்  தயாரி செய்யும் கும்பலுக்கு உதவியதாக சென்னை போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் போலி போஸ்போர்ட் நடமாடுவடுவதாக வந்த தகவல்களை தொடர்ந்து, போலீசாரின் அதிரடி வேட்டையில்  போலி பாஸ்போர்ட் தயார் செய்யும் கும்பல் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையின்போது, போலி பாஸ்போர்ட் எடுக்க உதவியதாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்காரர் முருகனை   போலி பாஸ்போர்ட் குறித்து விசாரணை செய்து வந்த  சென்னை போலீசின் சிசிபி ஸ்பெஷல் டீம் இன்று அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் போலி பாஸ்போர்ட் வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து காவலர் முருகன் தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


English Summary
Fake passport: Chennai police arrested