டெல்லி: கொரோனா இழப்பீடு பெற போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம், சிஏஜி விசாரணைக்கு உத்தரவிடலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் அந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது. அதுபோல கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.50ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.50ஆயிரம் மாநில அரசுகள் மூலம் வழங்க உத்தரவிட்டு, அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில், பலர் போலி சான்றிதழ் பெற்று, நிவாரணம் பெற முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து இன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தரப்படுவதாக வரும் தகவல் கலை அளிக்கிறது என்று வேதனை தெரிவித்ததுடன், நமது ஒழுக்கம் இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் நினைக்கவில்லை என்றும், இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளதுடன்,

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை  தவறாகப் பயன்படுத்திய குறித்து சிஏஜி விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 10ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்! உச்சநீதி மன்றம்…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

[youtube-feed feed=1]