ஈரோடு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து உடைத்து நொறுக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோல தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நொறுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு பெருந்துறை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்க முகநூலில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்துரை சுங்கச்சாவடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

முகநூலில் பதிவிட்ட நபர், பெருந்துறை அருகே உள்ள விஐயமங்கலம் சுங்கச்சாவடியினை அடித்து நொறுக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், முகநூல் வாயிலாக  சுங்கச்சாவடியை நொறுக்க வருமாறு முகநூல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தது ஹரிகரன என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்ய  போலீசார் முயற்சி செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், அந்த நபர் தலைமறைவாகி உள்ளார். இதன் காரணமாக சுங்கச்சாவடி எந்நேரமும் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற நிலையில், சுங்கச்சாவடியில் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.