ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம்…?

Must read

டில்லி,

ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தெரிகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று டெல்லி தகவல்கள் கூறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் இன்று பதவி ஏற்றுள்ளதை தொடர்ந்து ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே பெங்களூரில் நடைபெற்ற வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் தனி நீதிபதி குண்ஹா ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்றும் அபராதம் விதித்தும் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ஜெ.முதல்வர் பதவியை இழந்தார்.  தொடர்ந்து பெங்களுரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சுப்ரீம் கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கியது. தொடர்ந்து,  கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

கர்நாடக ஐகோர்ட்டு குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

அதை ஏற்கனவே விசாரித்து முடித்த நீதிபதிகள் விரைவில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் இதுவரை தீர்ப்பு வரவில்லை.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் மரணமடைந்துவிட்டார்.

இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியாக கேஹர் இன்று பதவி ஏற்றுள்ளதால், அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் என்று டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More articles

Latest article