காவிரி வழக்கு: பிப்ரவரி 7முதல் தொடர் விசாரணை! சுப்ரீம் கோர்ட்டு!!

Must read

டில்லி,

காவிரி தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ந்தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 7-ம் தேதி விசாரணை தொடங்கும் என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.

விபிசிங் பிரதமராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதி மன்றம் தலையிட்டதின் பேரில் காவிரி நடுவர் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடக 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று 1991ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்திற்கு 2000 டிஎம்சி காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் நிலுவையில் இருந்த போது மத்திய அரசு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.

ஆனால்,  காவிரி நடுவர்மன்ற வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது,  மறு உத்தரவு வரும் வரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், பிப்ரவரி 7-ம் தேதி முதல் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், வடகிழக்கு பருவமழை 67 சதவீதம் பொய்த்து விட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதைததொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம்  உடனடியாக அமைக்க உத்தரவு பிறபிக்க முடியாது என்றும்,

ஏற்கனவே காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 2,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் கூறினர்.

 

More articles

Latest article