கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி  மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பட்டாசு விபத்து, அதனால் ஏற்படும் உயிர்பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் விதிமுறைகளைமீறி பட்டாசு தயாரிப்பதும், அதை தேக்கி வைப்பது போன்ற காரணங்களால் பட்டாசு வெடி விபத்துக்கள் தொடர்கின்றன. இதை தடுக்க மாநிலஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், உயிர்பலிகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டாமாகின. இந்த விபத்தில்  இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணியில்  தீயணைக்கும் வீரர்கள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.