புதுடெல்லி:
செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கு வகையில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதோடு பெரும்பாலான போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டவுடன், செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகள் மற்றும் புதிய அட்டவணை வெளியிடப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் அற்வித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வெளியிட்டுள்ள அறிக்கையில், செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த குழுவின் அறிக்கைக்கு பின்னரே தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.